எனக்குத் தெரிந்த தோழியொருத்தி திருமதி.கலா கைலாசபதி
அவளின் கணவர் பொறியியல் துறைப் பேராசிரியர்.
வயது 36 ஆகும் அவள் நல்ல குடும்பத்தலைவி மட்டுமல்ல ஒரு பையனுக்கும் அன்னை.
மிகுந்த, சற்று அதிகமாகவே கடவுள் பக்தி கொண்ட அவள் எந்த பூசை,புனஸ்காரத்தையும் விடாமல் கைப்பிடித்து வருவதோடு அடிக்கடி விரதம் இருந்து உடலையும் வருத்திக் கொள்பவள்.
அவள் பத்து நாட்களுக்கு முன்பு தலை சுற்றல் ஏற்பட்டு மயக்கமடைய உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டாள்.
தற்போது மயக்கம் தெளியாமல் கோமா நிலையில் இருப்பதோடு ஒரு பக்கமாக கைகால்களும் செயலிழந்து விட்டன.
பரிசோதித்த மருத்துவர்கள் மூளைக்குச் செல்லும் நரம்பு ஒன்று பழுதடைந்து அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டறிந்து, உடனடியாக இரண்டு அறுவைச் சிகைச்சைகளையும் செய்துள்ளனர்.
நரம்பு பழுதடைந்து இந்த நிலை ஏற்பட்டதற்கு என்ன காரணம் தெரியவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு மிக லேசாக கணவிழித்துப் பார்த்தவள் தன் கணவரைப் பார்த்து கண்கலங்கியிருக்கிறாள்.ஆனாலும் இன்னும் மயக்கம் தெளியாத நிலையிலேயே இருக்கிறாள்.
மிக லேசாக கை,கால்களில் அசைவு இருந்தாலும் டாக்டர்கள் ஏதும் உறுதியாகச் சொல்லமுடியாத நிலையில் உள்ளனர்.
அவள் பரிபூரண குணமடைந்து உடல் நலத்தோடு மீண்டுவர உங்களையும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.
இந்த பதிவு படிக்கும் நண்பர்கள் ஓரே ஒரு நிமிடம் அந்தப் பெண் குணமடைய வேண்டும் என நினைத்தாலே போதும்.
ஆத்மார்த்தமான நெஞ்சங்களின் வாழ்த்தும் ஆசிகளும் அவளைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
Thursday, August 14, 2008
சகோதரி கலாவுக்காக ஒரு பிரார்த்தனை
Posted by கௌசி at 2:57 AM
Labels: கலா குணமடைய
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
உடல்நலமடைய வேண்டுகிறேன்.கோமா நிலையிலிருந்து கண் விழிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள் அல்லவா?நம்பிக்கை துணை நிற்கும்.
நன்றி நடராஜன்
மிண்டும் பழைய நிலைமைக்கு வர கடவுளை வேண்டிகொள்கிறேன்
நம்பிக்கை ஜெயிக்கும் நண்பரே...
நானும் சேர்ந்துக்கறேன்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment