இன்றைய தினத்தின் என்னுடைய இரண்டாவது பிராத்தனையிது.
எங்கள் நண்பர் திரு இராமச்சந்திரன் திருமதி.உஷா இராமச்சந்திரன் அவர்களின் புதல்வர் திரு.கார்த்திக்.
இவர் பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
திருமணமாகி ஒரு குழந்தையும் உண்டு.31 வயதே ஆன இளைஞர்.
சில தினங்களுக்கு முன்பு ஜுரம் உடல்வலி என்ற காரணங்களுக்காக தடை செய்யப் பட்ட மருந்தான நிமோசில்லின் [சரிதானே] வகையைச் சேர்ந்த மாத்திரைகளை
[மருத்துவ ஆலோசையின் பேரிலா இல்லையா என்பது தெரிய வில்லை]உட்கொண்டிருக்கிறார்.
அதிலும் ஓவர் டோஸாக இரண்டே தினங்களில் சுமார் பத்து பன்னிரெண்டு மாத்திரைகள் வரைஎடுத்துக் கொண்டார் எனத் தெரிகிறது.
அதன் விளைவாக சில தினங்களாக சரிவர சிறுநீர் பிரியாமல் வேதனைப் பட்டு மிகவும் அபாயகரமான கட்டத்தில் பெங்களூருவில் இருந்து அழைத்து வரப் பட்டு தற்சமயம் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடைய கல்லீரலும் இரண்டு சிறு நீரகங்களும் பாதிக்கப் பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இன்னமும் நீர் பிரியாமல் உணவும் உட்கொள்ளமுடியாத நிலையில் உள்ளார்.ஒரு நாளைக்கு 30 மி.லி அளவு தண்ணீர் மட்டுமே பருக வேண்டிய நிலைமை.தொடர்ந்து டயாலிஸிஸ் செய்யப் பட்டு வருகிறது.
அந்த இளைஞர் குணமடைந்து வர நண்பர்களின் பிரார்த்தனைகள் உதவட்டும்.
Monday, November 12, 2007
கார்த்திக் குணமடைய பிரார்த்திப்போம்
Posted by கௌசி at 7:37 AM
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
கார்த்திக் விரைவில் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள்.
இன்னும் என்னென்ன மாத்திரைகள்/மருந்துகள் தீய பின்விளைவுகளோடு உலா வருகிறதோ??
என்னுடைய பிராத்தினையும்...
கார்த்திக் சீக்கிரமே பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
திருமதி.உஷா இராமச்சந்திரன் பேரில் ஒரு பதிவரும் உள்ளாரே. அவர் மகனா? விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
யாராவது மருத்துவர், அந்த மாத்திரை குறித்தும், ஏன் தடை செய்யப் பட்டது என்வும் இஙு கூறினால் நலம். ஆமாம், தடை செய்யப்பட்ட மருந்தை ஏன்/எப்படி கடையில் விற்கிறார்கள்?
பிபட்டியன், உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் போல நண்பர் ஒருவரும் மெயில் அனுப்பியிருந்தார். நான் எழுதுவது ராமசந்திரன் உஷா என்ற பெயரில், தந்தை பெயர் ராமசந்திரன். எனக்கு இருக்கும் மகன் இன்னும் பள்ளி செல்லும் சிறுவன்.
கெளசி, அந்த மருந்தைப் பற்றி விவரமாய் எழுதுங்கள். விவரம் தெரிந்தால், பலரும் முன் ஜாக்கிரதையாய் இருக்கலாம்
இல்லையா?
கார்த்திக் நிலமை வருத்தமாய் இருக்கிறது. நம் பிராத்தனை பலனடைந்து அவர் குணமாக வேண்டும்.
Our Prayers for Karthik
My prayers for Karthik for his speedy recovery/
அடப்பாவமே......
நானும் பிராத்திக்கின்றேன்.
கார்த்திக் சீக்கிரமே குணமடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
நானும் பிராத்திக்கின்றேன்.
-Ramprasath
கார்த்திக் குணமடைய நானும் பிரார்த்திக்கிறேன்
//பிபட்டியன், உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் போல நண்பர் ஒருவரும் மெயில் அனுப்பியிருந்தார். நான் எழுதுவது ராமசந்திரன் உஷா என்ற பெயரில், தந்தை பெயர் ராமசந்திரன். எனக்கு இருக்கும் மகன் இன்னும் பள்ளி செல்லும் சிறுவன்//
உஷா, மன்னிக்கவும். தெளிவுபடுத்தியதற்கு நன்றி.
Post a Comment