Monday, November 12, 2007

அனுராதா அம்மாவுக்காக ஒரு கூட்டுப் பிரார்த்தனை

நம் சக வலைப் பதிவர் அனுராதா அவர்கள் கேன்சர் நோயுடன் போராடி மீண்டு வந்தவர்.

தன்னுடைய வலிகளையும் வேதனையையும் எழுத்தாக்கி வீழிப்புணர்ச்சி பதிவுகள் இட்டு வருகிறார்.
கேன்சருடன் ஒரு யுத்தம் என்ற பெயரில் எழுதி வருகிறார்.

இன்று மீண்டும் பல உடல் உபாதைகளால் பாதிக்கப் பட்டு வாடும்போதும் தன் அருமைக் கணவருடைய உதவியுடன் பதிவுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் தற்போதைய உடல் வேதனைகளில் இருந்து மீண்டு நலம் பெற்று குணமடைய பதிவர்கள் நம் பிரார்த்தனை நிச்சயம் உதவும்.

அவருக்காக நாம் ஒவ்வொருவரும் நம் இடத்திலிருந்தபடியே பிரார்த்திப்போம்

அவர் பதிவிலும் சென்று நம் நம்பிக்கையை பின்னூட்டமாக பதிவு செய்வோம் வாருங்கள்.

பிரார்த்தனை என்பது கடவுள் வழிபாடு மட்டுமல்ல.அவர் நலமடைய வேண்டும் என்ற ஆத்மார்த்த எண்ணமே கோடிப் பிரார்த்தனைகளுக்குச் சமம்.

அம்மா அனுராதா பூரண குணமடையட்டும்.

8 comments:

Baby Pavan said...

அனுராதா அம்மாவுக்காக நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

கோவி.கண்ணன் said...

அனு அம்மா மிக விரைவில் மீண்டு வரவேண்டும்.

cheena (சீனா) said...

சகோதரி அனுராதா சீக்கிரமே குணமாகி பழைய நிலைக்குத் திரும்ப நல்வாழ்த்துகள். இறைவனின் கருணையை வேண்டுகிறோம்.

Anonymous said...

Praying for Anuradha's well being and speedy recovery

well wisher

Unknown said...

சகோதரி அனுராதா சீக்கிரமே குணமடைய, எங்கள் பிரார்த்தனைகள்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சகோதரியின் யுத்தத்தைத் தொடர்ந்து படித்தவன், அவர் நலம் பெற வேண்டுகிறேன்.

தமிழ்நதி said...

எவ்வளவு மனத்துணிவுள்ள பெண் அவர்! இன்று அவருடைய பழைய பதிவுகளைப் படிக்க நேர்ந்தது. மருத்துவர்கள் செய்யாததை அவரின் மனத்துணிவு செய்யும். நலமடைய பிரார்த்தனைகள்.

Anonymous said...

அனுராதா அம்மா விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்