Monday, January 29, 2007

வெங்கட் குணமடைந்து வருகிறான்....அன்பான உள்ளங்களின் பிரார்த்தனைக்கு நன்றி...நன்றி.

அன்பான தமிழ்மண நண்பர்களுக்கு
என்னுடைய இந்த பிரார்த்தனை நேரம் பதிவின் முதல் நபரான
எங்கள் குடும்ப நண்பர் திரு&திருமதி சங்கர்[சின்சினாட்டி]அவர்களின் அன்பு மகன் 18 வயதே நிரம்பிய இளைஞன்
வெங்கட் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவன் இன்று மிக நன்றாக குணமடைந்து வருவதாக நண்பர் மூலம்
அறிந்தேன்.நடக்கவும்,ஓடவும்,பார்க்கவும்,
பேசவும் என நல்ல முறையில் தேறிவருகிறான்.
ஞாபக சக்தி மட்டும் சற்று குறைவாக உள்ளது.
அவன் பரிபூரண குணமடைந்து நோயின் தாக்கத்திலிருந்து விரைவில் சுகம் பெறுவான் என்ற நம்பிக்கையுடன்,
அவனுக்காக பிரார்த்தித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
பின்னூட்டம் இட்டும்,இடாவிட்டாலும் இந்த பதிவைப் பார்த்து
அவனுக்காக வேண்டிய அத்துனை நல்ல உள்ளங்களையும் வணங்குகிறேன்
நன்றி.....நன்றி.......நன்றி

7 comments:

thiru said...

மனதை இதமாக்கும் செய்தி! வெங்கட் முழுமையாக குணமடைந்து நலமாக வாழட்டும்.

கௌசி said...

மிக்க நன்றி திரு சார்.தமிழ்மண
நண்பர்களின் அன்பில் உண்மையிலேயே நெகிழ்ந்து போகிறேன்.

ஆதிபகவன் said...

மிக விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும்.
நலம் பெற வாழ்த்துக்கள்

பொன்ஸ்~~Poorna said...

ஆறுதலான விதயம் தான் கௌசி.. சீக்கிரமே முழுமையாக குணம் காணட்டும்...

கௌசி said...

நன்றி பொன்ஸ்,ஆதிபகவன் சார்

சென்ஷி said...

வெங்கட் முழுமையாக குணமடைந்து நலமாக வாழட்டும்.


சென்ஷி

Anonymous said...

god is love He never let his children down